உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும்

Published On 2023-10-01 10:41 GMT   |   Update On 2023-10-01 10:41 GMT
  • பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற கோரிக்கை.
  • அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கப்படுவதாக புகார்.

தமிழகத்தில் பேனர்களால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர்டிஓ, பேரூராட்சி, பஞ்சாயத்து, போலீஸ் என அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பேனர் வைப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, மற்றும் கிராமப்பகுதிகளில் அனுதியில்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் வைக்கப்படுகிறது.

சில இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. உரிய அனுமதியில்லாமல் ஒரு சில இடங்களில் சில நாட்கள் பேனர் வைக்க அப்பகுதி போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாத கூறப்படுகின்றது.

அரசின் விதிமுறைகளை மதித்து பேனர்கள் வைக்க அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் என கூறப்படுகின்றது.

அரசின் விதிமுறைகளை முழுமை யாக நடைமுறை படுத்தி விபத்து, மற்றும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News