விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீர் நிலைகளில் பெண்கள், சிறுவர்களுக்கு தடை
- 1,300 விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
- அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நீர்நிலை களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் 400 சிலைகள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதி களில் 900 சிலைகள் என மொத்தம் 1,300 விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இதில், கிருஷ்ணகிரி நகர, ஒன்றிய இந்து முன்ன ணி மற்றும் விஎச்பி சார்பில் 28 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான இன்றும் , 5-வது நாளான 22-ம் தேதியும் பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும், 7-வது நாளான 24-ம் தேதி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநா யகர் சிலை களையும் ஊர்வ லமாக எடுத்துச் கிருஷ்ண கிரி சென்று அணையில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக போலீசார் சார்பில் கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் பாது காப்பு முன்னேற்பாடு பணி கள் செய்யப்பட்டுள்ளன. அணைப் பகுதியில் மின்னொளி, கண்காணிப்பு பந்தல், அணையின் கரைப் பகுதியில் தடுப்புகள் (பேரிகார்டு) உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மேலும், கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகளைப் பாதுகாப்பாக கரைக்க காவல்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும். சிலை யை கரைக்க 3 அல்லது 4 பேர் மட்டும் செல்ல வேண்டும். சிறுவர்கள் மற்றும் பெண்கள் தண்ணீ ரில் இறங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதே போல, விநாயகர்சிலைகள் கரைக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீராதா ரங்களில் அந்தந்த பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணி களை ஈடுபட்டு வருகின்ற னர்.