உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
- ஆடி உற்சவம் கடந்த 12-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- பக்தர்கள் காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
சீர்காழி:
சீர்காழி விளந்தி டசமுத்திரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கடந்த 12-ம் தேதி காப்பு கட்டி உற்சவம் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சீர்காழி மணிகூண்டு மங்கைய ர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்ட ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.