கண்களை சிமிட்டியும், காதுகளை அசைத்தும் பக்தர்களுக்கு காட்சி தரும் பாலபூர் விநாயகர்
- பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.
ஓசூர்,
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் ஐதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக ஓசூரில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சுமார் 600 விநாயகர் சிலைகள் இன்று நிறுவப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மிகப் பிரமாண்டமாக பெரிய விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஓசூரில் சிவசேனா கட்சியின் யுவசேனா அணி சார்பில், பழைய வசந்த் நகர் பகுதியில், ஓசூர் கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.
முகப்பு வாச லில் நாகபுற்று வடிவமைக்கப்பட்டு அதில் இருந்து தீயுடன் வெளியே வரும் நாக தேவதையும், சிங்கத்தின் அருகே நின்று கண் இமைத்து பார்க்கும் அம்மன் சிலை, பூஜைகள் செய்யும் பூசாரி சிலை, கர்ஜிக்கும் சிங்கம் மற்றும் முருகன், விநாயகர் ஆகிய தெய்வங்கள் என விநாயகர் சதுர்த்தி விழாவை காண வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக பிரமாண்ட செட் அமைக்கப் பட்டுள்ளது.
உள்ளே, நாக தேவதை யின் மடியில் அமர்ந்து கண் சிமிட்டி, காதுகளை அசைத்து பக்தர்களுக்கு அருள் வழக்கும் வகையில் பாலபூர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகரை தரிசித்து வெளியே வரும் பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.
மிக வித்தியாசமான வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை பொது மக்கள் நீண்ட வரிசையில் சென்று வியப்புடன் பார்த்து ரசித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் சிலைகள் முன்பு ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த பிரமாண்டமான செட்டை சுற்றி விழிப்பு ணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பெற் றோர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது பக்தர்களுக்கு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பில் விநாயகருக்கு ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவசேனா கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் முரளி மோகன் கூறுகையில், "சுமார் 20 லட்சம் செலவில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சனா மற்றும் சந்திரமுகி - 2 ஆகிய படங்களின் ஆர்ட் கலை ஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரங்கின் உள்ளே பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. வருகிற ஞாயிற்றுக்கிழமை (24-ந் தேதி) வரை நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.