உள்ளூர் செய்திகள்

திருப்பூர் பஸ் நிலையத்தில் தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-01-17 07:15 GMT   |   Update On 2023-01-17 07:15 GMT
  • விபத்து ஏற்படுவதை தடுக்க சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
  • விபத்து ஏற்படுவது போல் நடித்து காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு - 2, தெற்கு போலீஸ் ஆகியன சார்பில், மத்திய பஸ் ஸ்டாண்டில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தெற்கு சைபர் கிரைம் இன்ஸ்பெ க்டர் சொர்ணவள்ளி, எஸ்.ஐ., ஆண்டவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.'அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படுவதை தடுக்க சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். லைசன்ஸ் இல்லாதவர் சாலையில் வாகனத்தை இயக்க அனுமதில்லை.

மொபைல் போன் பேசியபடி வாகனத்தை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது,' என, அறிவுரை வழங்கப்பட்டது.மாணவ செயலர் ராஜபிரபு, பூபதிராஜா தலைமையிலான குழுவினர், 'போதையில் வாகன ஓட்டும் போதும், மொபைல் போன் பேசியபடி வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் விபத்து ஏற்படுவது போல் நடித்து காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News