உள்ளூர் செய்திகள்

வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அரசு பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-08-03 09:37 GMT   |   Update On 2023-08-03 09:37 GMT
  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.

ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர் ராஜலட்சுமி பேசுகையில், பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.

இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது குடும்ப சூழல் சமுதாய பழக்கங்கள் நிறைந்த பகுதியில் உள்ளவர்கள் நல்ல நட்பு வட்டத்தின் காரணமாக உரிய வழிகாட்டுதலோடு இப்பருவத்தை எளிதில் கடந்து விடுகின்றனர்.

பலர் சமூக ஊடகங்களின் தாக்கத்தினாலும் தவறான நட்பு, திரைப்படங்களின் பாதிப்பு, கலாச்சாரம் போன்ற போலியான பிம்பங்கள் மூலமாக தடுமாற்றத்தை சந்திக்கின்றனர்.

இந்த நிலை மாற்றுவதற்கு இப்பருவத்தில் சற்று தடுமாறினாலும் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறைகள் கட்டுப்பாடான உடை, அலங்காரங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து ரைக்க வேண்டும். என்றார்.

முடிவில் ஆசிரியை அஜிதா கனி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

Tags:    

Similar News