விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
சூளகிரி அதியமான் கல்லூரியில் ராகிங் குறித்த விழிப்புணர்வு
- அதியமான் கல்லூரியில் ராகிங் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- மாணவர்களுக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ராகிங் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் பொறுப்பு முதல்வர் லக்ஷ்மணகுமார் மற்றும் மேலாளர் சுப்ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் இதில், பேரிகை துணை சப் -இன்ஸ்பெக்டர் சிவகுமார் கலந்து கொண்டு, ராகிங்கை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் ராகிங் செய்பவர்களுக்கான தண்டனைகள் குறித்தும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் அவர் மாணவர்களுக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் காவல்துறையை எவ்வாறு தொடர்பு கொள்வது? என்றும் விளக்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் உதவி பேராசிரியர்களுமான காவியா மற்றும் தர்மதுரை ஆகியோர் தொகுத்து வழங்கினர்.