உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

Published On 2023-01-04 09:49 GMT   |   Update On 2023-01-04 09:49 GMT
  • சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.
  • ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான் மருந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

கும்பகோணம்:

சோயா சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் சார்பில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

முகாமிற்கு சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயக்குனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணன் வரவேற்றார்.

முகாமிற்கு வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி கலந்துகொண்டு பேசுகையில் சோயா பீன்ஸ் முக்கியத்துவம் அதன் பயன்கள், ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், சாகுபடி தொழில் நுட்பங்கள், பற்றியும் குறைந்த நாட்களில் குறைந்த செலவில் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் சோயாவில் 18 முதல் 20 சதவீத எண்னெய் உள்ளது, சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் மேலும் சோயாவில் புரத சத்து 38 முதல் 40 சதவீதம் உள்ளது.இந்த புரத சத்து உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.

நெல் சாகுபடிக்கு பிறகு சோயா சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.

இந்த ஆண்டு கும்பகோணம் வட்டத்திற்கு சோயா சாகுபடி செய்ய 100 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் சோயா தொகுப்பு செயல் விளக்கத்திற்காக ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 5000 மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான மருந்து 50 சத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

சோயா பீன்ஸ் விதைகள் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள சுவாமிமலை, கொத்தங்குடி, சோழபுரம், கும்பகோணம், கொற்கை, ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா விதைகள் வழங்கப்பட்டது.

முகாமில் சோயா கல அலுவலர் வெங்கடாசலம் உதவி அலுவலர் விவேக், உதவி வேளாண்மை அலுவலர் கீர்த்திகா, முன்னோடி விவசாயி சந்திரசேகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News