உள்ளூர் செய்திகள்

தொழுநோய் பரிசோதனை குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொழுநோய் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு

Published On 2022-06-24 08:30 GMT   |   Update On 2022-06-24 08:30 GMT
  • பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
  • பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அருகே திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சீர்காழி அருகே உள்ள கொண்டல், தேனூர், ஆதமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளர்ப்பதன் அவசியம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News