உள்ளூர் செய்திகள்

மதுபான கடைகளில் தானியங்கி மது விற்பனை எந்திரம்

Published On 2023-04-29 03:11 GMT   |   Update On 2023-04-29 03:11 GMT
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
  • எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

சென்னை:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை தடுக்கும் கையில் 4 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் நிறுவ நடவடிக்கையில் உள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை எந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.

மேலும், தானியங்கி மதுபான எந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப் பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் கடை பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.

தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

இதுகுறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News