உள்ளூர் செய்திகள்

சிறப்பு வளையல் பாவாடை அலங்காரத்தில் அருள்பாலித்த புன்னைநல்லூர் மாரியம்மன்.

ஆடி முதல் வெள்ளி; புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-21 15:28 IST   |   Update On 2023-07-21 15:28:00 IST
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
  • இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.

ஆடி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

கடந்த 18-ந் தேதி ஆடி முதல் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தன.

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வளையல் பாவாடை அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை மனம் உருகி தரிசித்தனர்.

பல பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இன்று மாலை கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல் கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனல் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.

இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வல்லம் பாபநாசம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றன.

Tags:    

Similar News