உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த மளிகை கடை.

விக்கிரவாண்டியில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் கொள்ளை

Published On 2023-05-10 06:36 GMT   |   Update On 2023-05-10 06:36 GMT
  • அன்பழகன். இவர் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகிலுள்ள மளிகை கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
  • இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு கீழே கிடந்ததை பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து கடை உரிமையாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம்மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் விக்கிரவாண்டி பஸ் நிலையம் உள்ளே மளிகை கடையை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டி விட்டுவீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு கீழே கிடந்ததை பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து கடை உரிமையாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். அன்பழகன் கடைக்கு வந்து பார்த்த போது இரும்பு கதவினை கட்டப்பா ரையால் கொண்டு நெம்பி 3 பூட்டை உடைத்து கடைக்குள்ள இருந்து பணம் ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் ,காத்தமுத்து ஆகியோர் கொள்ளை நடந்த கடைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் விக்கிரவாண்டியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News