உள்ளூர் செய்திகள்

ரேசன் கடையை திறந்து வைத்து பொருட்களை தடங்கம் சுப்பிரமணி வழங்கினார். அருகில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம் உள்ளார். 

வெங்கட்டம்பட்டியில் பகுதி நேர ரேசன் கடை- தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்தார்

Update: 2022-08-15 09:52 GMT
  • வெங்கட்டம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரிசிகளை வழங்கினார்.
  • பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம் பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டுமென கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தடங்கம் சுப்பிரமணி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தார்.

மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் இடத்திலும், வெங்கட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வெங்கட்டம் பட்டியில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று வெங்கட்டம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரிசிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், மாதேமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், தி.மு.க. மகளிர் அணி முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News