உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வேலைவாய்ப்பு திருவிழாவில் 25 ஆயிரம் பேருக்கு பணி வழங்க திட்டம்

Published On 2023-02-02 15:21 IST   |   Update On 2023-02-02 15:21:00 IST
  • சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
  • வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்கள், உரிய கல்விச்சான்றுகள், புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் திருவிழாவில் பங்கேற்கலாம்.

 திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாநகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்கள், உரிய கல்விச்சான்றுகள், புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் திருவிழாவில் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய https://tirupurjobfair.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டம், ஆசிரியர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள், காவலாளி என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அனு–மதி இலவசம்.

வேலைவாய்ப்பு திருவிழா குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மகளிர் திட்டத்தை சேர்ந்த வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசும்–போது, 34 துறைகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். தற்போது வரை 25 ஆயிரத்து 300 பேருக்கு வேலை–வாய்ப்பு வழங்க தயாராக உள்ளது. படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. 1 லட்சம் பேர் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உள்ளிட்டவரகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News