உள்ளூர் செய்திகள்

கழனிகாட்டூரில் கனமழையினால் மூன்று தடுப்பணைகளை அடித்து சென்ற வெள்ளம்

Published On 2022-08-03 09:15 GMT   |   Update On 2022-08-03 09:15 GMT
  • நீர் நிலைகளில் மழை நீர் தினந்தோறும் அதிக அளவில் செல்கிறது.
  • 3 தடுப்பணைகள் அதிக அளவில் வந்த மழைநீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகர்கூடல் ஊராட்சியில் கழனிகாட்டூர் பகுதி உள்ளது.

நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சிறு ஓடைகள் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீர் தினந்தோறும் அதிக அளவில் செல்கிறது.

மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் காட்டாற்று வெள்ளமும் அவ்வப்போது வருகிறது. அதேபோல் கழனி காட்டூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக அனைத்து நீரோடைகளிலும் அதிக அளவில் மழை நீர் வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த நீரோடையின் குறுக்கே மழை காலங்களில் மழை நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த 3 தடுப்பணைகள் அதிக அளவில் வந்த மழைநீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Tags:    

Similar News