உள்ளூர் செய்திகள்

மேயர் சத்யா ஆய்வு மேற்கண்ட போது எடுத்த படம்.

ஒசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து பாதிப்பு குறித்து, மேயர் சத்யா நேரில் ஆய்வு

Published On 2022-09-27 15:49 IST   |   Update On 2022-09-27 15:49:00 IST
  • மேயர் சத்யா, மாநகர அதிகாரிகளுடன், அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
  • அதிகாரிகள் பிரபாகரன் , ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

ஓசூர்,

ஓசூர் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில், அனைத்து பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மக்கா குப்பைகளை இங்கு அரவை செய்து பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள், அரவை எந்திரம் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. இதையத்து, மாநகராட்சி மேயர் சத்யா, நேற்று மாநகர அதிகாரிகளுடன், அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, துணை மேயர் ஆனந்தையா , மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், வெங்கடேஷ், மாநகராட்சி அதிகாரிகள் பிரபாகரன் , ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News