உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும்- அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-08-04 15:31 IST   |   Update On 2022-08-04 15:31:00 IST
  • மேலும் ஆகஸ்ட் 13 தேதியன்று கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறும்.
  • அரசு அலுவலக நேரத்தில் காலை, மாலை இரண்டு நேரமும் அரசு பேருந்து இயக்கபட வேண்டும்.

தருமபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மகளிர் மாநாடு தருமபுரி நரசிம்ம ஆச்சாரி தெருவில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவரும் மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினருமான கோ.பழனியம்மாள் சிறப்புறையாற்றினார். மாவட்ட மகளிர் துனணக்குழு உறுப்பினர்கள் அனுசுயா ,ஜான்சி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தருமபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் அரசு ஊழியர்க ளுக்கென தனி கழிப்பறை, ஓய்வறை, ஏற்படுத்தவேண்டும். குழந்தைகள் காப்பக அறை ஏற்படுத்தவேண்டும். அரசு அலுவலகங்களிலும், களப்பணிகளிலும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த ேவண்டும். மேலும் அரசு அலுவலக நேரத்தில் காலை, மாலை இரண்டு நேரமும் அரசு பேருந்து இயக்கபட வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஆகஸ்ட் 13 தேதியன்று கிருஷ்ணகிரியில் நடைபெறும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News