பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்சான்றிதழ் பட்டமளிப்பு விழா
- பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற் சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
- பயிற்சிக்கு பின் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம் என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற் சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு முதல்வர் சுப்ரமணி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற வர்கள், இந்தியன் ரெயில்வே, பி.எச்.இ.எல்., டி.ஆர்.டி.ஓ., உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் அல்லது அரசு போக்குவரத்து கழகம், ஆவின், மின்வார வாரிய நிறுவனங்களில் தொழில் பழகுநர் சட்டத்தின்படி ஒராண்டு பயிற்சி முடிக்க வேண்டும்.
பயிற்சிக்கு பின் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம் என்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பர்கூர் மின்சார வாரிய உதவி பொறியாளர் செல்வம், மருத்துவர் நாகேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
விழாவில், 2022-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, தேசிய தொழிற்சான்றிதழ்களை வழங்கி தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்டு ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளநிலை பயிற்சி அலுவலர் கோவிந்தராஜ், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை மற்றும் பயிற்சி தொடர்பான அறிவுரைகள் வழங்கினார். பணியமர்த்தும் அலுவலர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் மாண வர்கள், இளநிலை பயிற்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.