உள்ளூர் செய்திகள்
]பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம்
- ஆங்கிலத்துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
- வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணர்வு பூர்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கு 'வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணர்வு பூர்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் சென்னை புது கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் அப்துல் ஹாதி, ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம், ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ், உதவி பேராசிரியை கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீமதி நன்றி கூறினார்.