உள்ளூர் செய்திகள்

சாம்பல் புதன் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2023-02-22 07:52 GMT   |   Update On 2023-02-22 07:52 GMT
  • இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில்ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்பட உள்ளது.
  • பங்குதந்தைகள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலை பூசினர்.

திருப்பூர் 

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் வகையில் சாம்பல் புதனுடன் இன்று முதல் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது. ஏப்ரல் 7-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. இதனையொட்டி திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கேத்தரின் ஆலயம், பங்களா ஸ்டாப்பில் உள்ள தூய லூக்கா ஆலயம், அவினாசி ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் ஆலயம் உள்பட மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பங்குதந்தைகள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலை பூசினர். 

Tags:    

Similar News