உள்ளூர் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய வள்ளிமதுரை வரட்டாறு அணை.

வரட்டாறு அணை நிரம்பியுள்ளதால் ஏரிகளில் உபரி நீரை சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-12-27 15:18 IST   |   Update On 2022-12-27 15:18:00 IST
  • வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.
  • ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும்.அணையின் நீளம் 1,360 மீட்டராகும்.

சித்தேரி மலை தொடரில் பெய்த கனமழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.

இதனால் தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகள், குளம்,குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புவதற்கு ஆதாரமாக இருப்பதுடன் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் திறந்துவிட்டால் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.

தற்போது எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, வேப்பம்பட்டி, மாம்பாடி, அச்சல்வாடி உள்ளிட்ட கிராம பகுதியிலுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளன.

பொதுப் பணிதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வள்ளிமதுரை சுற்று வட்டாரப் பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News