அரூர் அரசு பள்ளியில் புத்தக திருவிழா
- மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
- மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வருகை புரிந்ததால் கூட்டம் அலைமோதியது.
அரூர்,
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை சார்பில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
புத்தக திருவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்அனிதா கலந்துக் கொண்டு, முதல் புத்தக விற்பணையை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ,அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாசிப்பது குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
புத்தக திருவிழாவில் அரசியல் சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான இடம் பெற்ற புத்தகங்களுக்கு பள்ளி மாணவ மாணவிர்கள், இளைஞர்கள் முன்னுரிமை அளித்து ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வருகை புரிந்ததால் கூட்டம் அலைமோதியது.