உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த வடமாநில தொழிலாளரின் உடலுக்கு விழுப்புரம் கலெக்டர் பழனி மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

பள்ளம் தோண்டும் பணியின் போது உயிரிழந்த வடமாநில தொழிலாளருக்கு ரூ.15 லட்சம் வழங்க ஏற்பாடு: விழுப்புரம் கலெக்டர் தகவல்

Published On 2023-05-13 09:22 GMT   |   Update On 2023-05-13 09:23 GMT
  • திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது,
  • பள்ளம் தோண்டும் பணியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தெரிவிக்கை யில், கடந்த 11-ந்தேதி திண்டிவனம் நகராட்சியில் வார்டு எண் 19, ரொட்டிக்கார தெருவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு மண் தோண்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிராஜ் மிர்ஜித் உட்பட 4 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை சுமார் 4 மணி அளவில் குழாய்கள் பதிக்கப்பட்டு மண் மூடுவதற்கு ஏதுவாக தடுப்பு பலகை அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சிராஜ் மிர்ஜித் என்பவர் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த அடிப்பட்ட சிராஜ் மிர்ஜித்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில்சிராஜ் மிர்ஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன சிராஜ் மிர்ஜித்க்கு தொழிலாளர் குழு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.15 லட்சம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்துவிட்ட சிராஜ் மிர்ஜித் உடல் பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுஜாதா, விழுப்புரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.அன்பழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News