உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

Published On 2023-11-01 14:24 IST   |   Update On 2023-11-01 14:24:00 IST
அரியலூர் அரசு கலை கல்லூரியில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

அரியலூர், 

அரியலூர் அரசு கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதி மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்க்கை வழிகாட்டு முறை குறித்து பேசினர்.

கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உயர்கல்வி ஆலோசகர் பாஸ்கரன், தேசிய தொழில் சேவை மையத்தின் இளம் தொழிமுறையாளர் எபிநேசர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார். 

Tags:    

Similar News