உள்ளூர் செய்திகள்

இந்திரா காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு

Published On 2023-11-01 13:35 IST   |   Update On 2023-11-01 13:35:00 IST
அரியலூர்இந்திரா காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு

அரியலூர்

இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி-காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், நகரத் தலைவர் மா.மு.சிவக்குமார், மகளிரணித் தலைவி மாரியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புகழ், வட்டாரத் தலைவர்கள் அரியலூர் கண்ணன், திருமானூர் கங்காதுரை, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News