- அரியலூர் நகர தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
- நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன் வரவேற்றார்.
அரியலூர்,
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகர தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன் வரவேற்றார்.
கூட்டத்தில் அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதி மேலிட பொறுப்பாளர் கவிஞர் சல்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒன்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்றி, கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் லதாபாலு, நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆ.குணா, நகர் மன்ற உறுப்பினர்கள் அன்பு, ராஜேஸ் , புகழேந்தி , சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.