உள்ளூர் செய்திகள்

ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு

Published On 2023-11-09 06:39 GMT   |   Update On 2023-11-09 06:39 GMT
  • ஜெயங்கொண்டம் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில்ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
  • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் வழங்கினார்

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அருகே உள்ள முத்துச்சேர்வார்மடம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பாரதி ரமேஷ் உள்ளார். இவர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள், புது வாழ்வு திட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை, இனிப்பு வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு ரெட்டிப்பாளையம், முக்குளம், நல்லிதோப்பு முத்துச்சேர்வார்மடம், சம்போடை, சுண்டிபள்ளம், கங்கவடங்கநல்லூர் உள்ளிட்ட 9 வார்டுகளில் பணிபுரிந்து வரும் 50 பணியாளர்களுக்கு அவர் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் தனது சொந்த செலவில் 4வது ஆண்டாக புத்தாடை, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் செய்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது சொந்த முயற்சியினால், வீடு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் 3 பழங்குடி இனத்தவர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

இந்த விழாவில் துணைத் தலைவர் அறிவழகன் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News