உள்ளூர் செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் வருடாபிஷேக, திருக்கல்யாண விழா

Published On 2023-08-23 12:07 IST   |   Update On 2023-08-23 12:07:00 IST
  • ஜெயங்கொண்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா, திருக்கல்யாண விழா நடைபெற்றது
  • வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷ அபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பட்டாச்சாரியார் மந்திரங்கள் ஓத, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் கணக்கர் கந்தவேல் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News