உள்ளூர் செய்திகள்

ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி

Published On 2023-04-29 11:54 IST   |   Update On 2023-04-29 11:54:00 IST
  • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது
  • திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது.

திருமானூர்:

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தேர்பவனி இன்று இரவு நடைபெறுகிறது.கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட உள்ள அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கவைக்க உள்ளார்.

பங்குதந்தை அதிபர் தங்கசாமி திருவிழாவை பற்றி கூறுகையில்.ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு ஆந்திரா. கர்நாடகா. கேரளா. பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்களின் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெயும் மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்வார்கள். திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும், மின்விளக்கு வசதிகளும் செய்து வருகிறோம் என்று கூறினார்.


Tags:    

Similar News