உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

Published On 2022-06-12 14:56 IST   |   Update On 2022-06-12 14:56:00 IST
  • கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி மாயமானார்
  • உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை

அரியலூா் :

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கீழத் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மனைவி ராஜகுமாரி (65). இவா், புதுக்குடி அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவா்

பின்னா் வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், ராஜகுமாரி கணவா் சின்னசாமி ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News