பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
- பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசு வீட்டு வரி, சொத்துரி, மின் கட்டணம் ரத்து செய்ய கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் 27 பேரும், தா.பழூரில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் மறியல் ஈடுபட்ட 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி, தா.பழூர் கடை வீதியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை உயர்த்தி 27 லட்சம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்ததாக மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு வீட்டு வரி, சொத்துரி, மின் கட்டணம் ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த எட்டு ஆண்டுகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்கள் விலை பல மடங்கு உயர்வு. அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகிய உணவு பண்டங்கள் மீது போடப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இறந்த பிணத்தின் இறுதி சடங்குகளுக்கு போடப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
வேலையின்மை, வருவாய் இழப்பு சூழலில் அதானி, அம்பானி குடும்ப நிறுவனங்களுக்கு மட்டும் கோடி கோடியை கொள்ளை லாபம் ஈட்ட வரி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமையில் 27 பேரும், தா.பழூரில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் மறியல் ஈடுபட்ட 29 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர்.