குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது
- முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டிகளை தொடக்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கிடையே குறுவட்ட அளவிலான குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், அரியலூர் நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ், விளையாட்டு குழுத்தலைவர் அருண்ராஜ் எழில்மாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கண்ட போட்டிகளின் நடுவராக உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி , வீரபாண்டியன் , செல்வ பாண்டியன் , தினேஷ் குமார் , இளவரசன் ,வில்லாளன் , சம்பத் , ஜபருல்லா ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி , உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.