உள்ளூர் செய்திகள்

திருமண உதவி நிதி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தீர்மானம்

Published On 2022-06-17 08:22 GMT   |   Update On 2022-06-17 08:22 GMT
  • திருமண உதவி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும்

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடைபெற்றது இதில், நிறுத்தப்பட்டுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் உள்பட அனைத்து நிதியுதவி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

தா.பழூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். விரிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையம் அமைக்க வேண்டும். பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து பொருள்களும் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ,அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வாசுகி தலைமை வகித்தார். நிர்வாகிகள் செபஸ்தியம்மாள், அழகுரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் வாலண்டினா, மாநில துணை செயலாளர் கீதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாநாட்டில் மாவட்டச் செயலர் பத்மாவதி, துணைச் செயலாளர் மீனா, பொருளாளர் அம்பிகா, ஒன்றியச் செயலர் மாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News