உள்ளூர் செய்திகள்

அரியலூரில் பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம்

Published On 2022-06-12 15:05 IST   |   Update On 2022-06-12 15:05:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
  • பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளையும் தெரிவித்தனர்

அரியலூர்:

அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரியலூர் தாலுகாவில் பார்பனச்சேரி கிராமத்திலும்,

உடையார்பாளையம் தாலுகாவில் பாப்பாக்குடி (வடக்கு) கிராமத்திலும், செந்துறை தாலுகாவில் சன்னாசிநல்லூர் கிராமத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் நடைபெற்றது.

முகாம்களில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு நகல், மின்னணு குடும்ப அட்டையை மாற்றுத்திறனாளிகள்,

வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச்சான்று, குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர்.

மேலும் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளையும் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அறப்பள்ளி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News