உள்ளூர் செய்திகள்

மனுதாருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published On 2023-01-10 13:20 IST   |   Update On 2023-01-10 13:20:00 IST
  • சேவை குறைபாடு காரணமாக
  • மனுதாருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அரியலூர்:

செந்துறை வட்டம், மருவத்தூர் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரகாசன் (வயது 53). இவரது தந்தை கடந்த 1971 ஆம் ஆண்டு கிரைய ஆவணம் மூலம் பெற்ற நிலத்துக்கு தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தருமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செந்துறை வட்டாட்சியர் அலுவலத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்திருந்தார்.ஆனால் விண்ணப்பித்தின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செந்துறை வட்டாட்சியர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரகாசன் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த வந்த நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் பட்டா மாற்றம் கோரி சந்திரகாசன் அளித்த விண்ணப்பத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் செந்துறை வட்டாட்சியர் எடுக்கவில்லை என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மாதங்களுக்கு மேலாக எவ்வித பதிலையும் வழங்காமல் இருந்தது சேவை குறைபாடு.புகார்தாரர் சமர்ப்பித்த மனு மீது நான்கு வார காலத்துகுள் நடவடிக்கை மேற்கொண்டு அதனை அவருக்கு தெரிவிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு புகார்தாரர் பட்டா மாற்றம் கேட்டு மனு செய்த நாள் முதல் இந்த வழக்கு தாக்கல் செய்த நாள் வரை பணியாற்றிய செந்துறை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர்கள் புகார்தாரருக்கு ரூ 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News