உள்ளூர் செய்திகள்

தா.பழுர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2023-04-28 05:50 GMT   |   Update On 2023-04-28 05:50 GMT
  • தா.பழுர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
  • தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பாக சிலால் சாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றி கோடைகால தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். மேலும் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சிலால் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தா.பழுர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News