உள்ளூர் செய்திகள்

முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-06-13 15:18 IST   |   Update On 2022-06-13 15:18:00 IST
  • முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் நேற்று அதிகாலை முருகனுக்கு பால், தயிர், சந்தனம், திருநீறு, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசநாதர் கோவிலுள்ள முருகனுக்கும், செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், தாமரைக்குளம், ஓட்டக்கோவில், பொய்யாத நல்லூர், வெள்ளூர் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News