உள்ளூர் செய்திகள்
அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்
- சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
- பள்ளி மேலாண்மை குழு, சிறந்த குழுவிற்கான விருதினை பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அகிலா தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது, பள்ளி மேலாண்மை குழு சிறந்த குழு காண விருதினை பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், கோகிலா.செவ்வேள், இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.