சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோாட்டு தீர்ப்பு
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ெஜயங்கொண்டம் மேலகுடியிருப்பைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாண்டியன்(வயது55). கூலி தொழிலாளியான இவர் கடந்த 24.12.2019 அன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.