உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-08-20 12:40 IST   |   Update On 2023-08-20 12:40:00 IST
  • மீன் சுருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • மது குடித்ததால் கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விபரீத முடிவு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (வயது 29). கூலித்தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்த வான்மதி என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15-ந் தேதி ஆனந்த கிருஷ்ணன் மது குடித்துவிட்டு வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வான்மதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஆனந்த கிருஷ்ணன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News