உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-11 13:41 IST   |   Update On 2023-09-11 13:41:00 IST
  • அரியலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
  • உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன் (வயது 25), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சைனி வில்சியா (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சைனி வில்சியா தனது கணவரிடம் வட்டி தொகையை செலுத்த பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தில் அவர் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சைனி வில்சியா தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இதில், மனவேதனை அடைந்த கவிதாசன் வயலுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கவிதாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News