சுகாதார மையத்திற்கு மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
- கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவிலூர், திரௌபதியம்மன் கோயில் அருகிலுள்ள நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக இருப்பதினால், வேறு இடத்தில் போர்வெல் போட்டு நல்ல குடிநீர் வழங்க வேண்டும்.தஞ்சாவூர் -ஆண்டிபட்டாக்காடு கிராமம் வரை கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். மோசமான நிலையில் உள்ள கோவிலூர் - ஆண்டிபட்டாக்காடு சாலையை சீரமைத்து தரவேண்டும். கோவிலூர் துணை சுகாதார நிலையத்துக்கு பகுதி நேர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனகூட்டத்துக்கு அக்கட்சி நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருணாநிதி, கருப்பையன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் வேல்முருகன் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணைச் செயலர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கட்சியின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினார். ஒன்றியச் செயலர் கனகராஜ் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். முடிவில் கட்டுமான சங்க மாவட்ட செயலர் ஜீவா நன்றி கூறினார்.