உள்ளூர் செய்திகள்

அரியலூரில் சுதந்திரதினவிழா - தேசிய கொடியை கலெக்டர் ரமண சரஸ்வதி ஏற்றினார்

Update: 2022-08-15 09:20 GMT
  • சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
  • திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீ–சாரின் அணிவகுப்பு மரி–யாதையை ஏற்றுக் கொண்டனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 75-வது சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உலக சமாதானம் விரும்பும் பொருட்டு வெண்புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 258 பேரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வழங்கல்அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சிவக் குமார் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், மக்கள்பிரதிகளும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News