உள்ளூர் செய்திகள்

வருகிற 15-ந்தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா

Published On 2022-07-13 13:53 IST   |   Update On 2022-07-13 13:53:00 IST
  • வருகிற 15-ந்தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது
  • கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையம் செட்டி ஏரி பூங்கா திடலில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை திறப்பு விழா நிகழ்ச்சி 15-ந்தேதி மாலையில் நடைபெற உள்ளது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசுகிறார்.

விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்,

மற்றும் காங்கிரஸ், தி.க., தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு அமைப்பினர், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விழா முடிவில் அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News