பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சிறுமி
- கட்டாய திருமணம் செய்து வைத்ததால்ஆத்திரமடைந்த சிறுமி பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து முயன்றுள்ளார்
- போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி. மனைவி ரதியா (வயது 23). இவர்களுக்கு பிறந்து 41 நாளான க ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிவு செய்து,
ரதியாவின் அண்ணன் மற்றும் அவரது 16 வயதுடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேற முடிவு செய்த சிறுமி, கணவரின் அண்ணன் குழந்தைக்கு விஷம் வைத்து ெகால்ல முயன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை கைது செய்து திருச்சியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.