உள்ளூர் செய்திகள்

வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாட்டால் காதலன் வீட்டு முன்பு பெண் தர்ணா

Published On 2022-06-24 09:12 GMT   |   Update On 2022-06-24 09:12 GMT
  • பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
  • தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 44). கும்பகோணத்தை சேர்ந்த இவருக்கும், நகைக்கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரது கணவர் பாண்டியன், மணிமொழியை விவாகரத்து செய்த நிலையில் நஷ்ட ஈடாக மணிமொழிக்கு கொடுத்த பணம், நகை ஆகியவற்றை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே மணிகண்டனுக்கு மற்றொரு இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த செய்தியை அறிந்த மணிமொழி மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தன்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் பேசி கலந்து ஆலோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறியதன் பேரில் மணிமொழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மணிமொழிக்கு தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மேல குடியிருப்பு கிராமம் பரபரப்பாக காணப்பட்டது. மணிமொழிக்கு முன் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News