ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நாளை இலவச மருத்துவமுகாம்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
- ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நாளை இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
- முகாமில் உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம், திருச்சி தங்க மயில் ஜூவல்லரி லிமிடெட் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோடு, ஸ்டார் திருமண மண்டபத்தில் நாளை (16-ந்தேதி, வியாழக்கிழமை)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
ரோட்டரி 3000-ன் மாவட்ட பொதுச்செயலாளரும், துணை ஆளுநரும், தங்கமயில் ஜூவல்லரி முதன்மை செயல் அதிகாரியுமான வி.விஷ்வ நாராயணன், மாவட்ட பப்ளிக் இமேஜ் மற்றும் டிஸ்பிளே சேர்மன் டாக்டர் கே.சீனிவாசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் எ. சரவணன், உதவி ஆளுநர் ஆர்.சி.குமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ., மாநில சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைக்கிறார்கள்.
முகாமில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்க சாசன தலைவர் கே. செல்வராஜ், தலைவர் பி.கிருபாநிதி, செயலாளர் கே.சேதுராமன், பொருளாளர் கே.இளவரசன் ஆகியோர் செய்துள்ளனர்.