உள்ளூர் செய்திகள்

ஊரக கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-03-06 03:38 GMT   |   Update On 2023-03-06 03:38 GMT
  • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
  • 2.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் காவல் நிலையம் அருகில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வலுவலகம் ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா, செயற்பொறியாளர்மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர்தேவேந்திரன், உதவி பொறியாளர்அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News