உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தனியார் உணவகத்தில் குழிப்பணியாரத்தில் இரும்பு கம்பி கிடந்ததால் பரபரப்பு

Published On 2022-06-16 14:48 IST   |   Update On 2022-06-17 11:42:00 IST
  • தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டார்,

அரியலூர்:

அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம். எருத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினரான இவர், திருச்சி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் குழிப்பனியாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டு, உணவகம் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News