உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் என்ஜினீயர் பலி

Published On 2023-08-25 11:52 IST   |   Update On 2023-08-25 11:52:00 IST
  • வாகன விபத்தில் என்ஜினீயர் பலியானார்
  • மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது

அரியலூர்

குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 27). சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த மதிவாணன் நேற்று இரவு தனது தாயிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிவிட்டு ஈச்சம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஈச்சம்பட்டியில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வந்த வேன் இவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News